2 மனைவிகளும் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் வெற்றி
திருவண்ணாமலை: தனசேகர் முகத்தில் அப்படி ஒரு குஷி.. தன்னுடைய 2 மனைவிகளுமே தேர்தலில் ஜெயித்து விட்டனர்.. மாலையும் கழுத்துமாக வலம் வரும் மனைவிகளின் வெற்றியை இந்த விவசாயி தனசேகர் கொண்டாடி வருகிறார்! powered by Rubicon Project திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள கிராமம் வழுவூர்- அகரம்..
இங்கு வசித்து வருபவர்தான் தனசேகர்.. இவர் ஒரு விவசாயி.. இவருக்கு செல்வி, காஞ்சனா என்ற இரண்டு மனைவிகள்.
தனசேகரன் ஏற்கனவே ஊராட்சி மன்றத் தலைவராக இருந்துள்ளார். அதேபோல, செல்வியும் ஏற்கனவே வழுவூர்- அகரம் கிராம ஊராட்சியின் தலைவராக இருந்திருக்கிறார்.. அதனால் திரும்பவும், இப்போது நடந்த உள்ளாட்சித் தேர்தலில் வழுவூர்- அகரம் கிராம ஊராட்சியின் தலைவர் பதவிக்கு செல்வி போட்டியிட்டார்.
அதேபோல, காஞ்சனாவின் சொந்த ஊர் கோவில்குப்பம் சாத்தனூர்... இவருக்கு இந்த ஊரில் நிறைய செல்வாக்கு இருக்கிறது.. சொந்த கிராமம் என்பதால் இங்கேயே போட்டியிட்டார்.. அதனால் வழுவூர் அகரம் கிராமத்தில் போட்டியிடாமல், கோவில்குப்பம் சாத்தனூரிலேயே வேட்பாளராக நின்றார்.
ஏற்கனவே ஊராட்சி மன்ற தலைவராக இருந்ததால், தனசேகருக்கு தொகுதிகள் அத்துப்படி.. தொகுதி மக்களம் நெருக்கம்.. 2 கிராமங்களிலும் சுற்றி சுற்றி வந்து 2 மனைவிகளுக்கு வாக்கு சேகரித்தார்.. இவர்களின் குடும்பமும் இந்த பிரச்சாரத்தில் இணைந்தது.. வந்தவாசி ஒன்றியத்தில் போன 30-ம் தேதி தேர்தல் நடந்து,
அதன் வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், தனசேகரனின் 2 மனைவிகளுமே அபார வெற்றி பெற்று தலைவிகளாகி உள்ளனர்.. இதில் வெற்றி பெற்றவர்களை விட, அவர்களை ஜெயிக்க வைத்த தனசேகரனுக்குதான் வாழ்த்து குவிகிறதாம்.. 2 பக்கம் 2 மனைவிகளுக்கு மாலை அணிவித்து.. அந்த பூரிப்பில் நனைந்து வருகிறார் தனசேகரன்!