மும்பை : தன் காலத்தில் சிறந்த வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவராக விளங்கிய ஆஸ்திரேலிய முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஜேசன் கில்லெஸ்பி இந்திய வேகப் பந்துவீச்சாளர்கள் இருவரை புகழ்ந்து இருக்கிறார்.
தற்போது உலகில் இருக்கும் முன்னணி பந்துவீச்சு கூட்டணி என அவர்களை பாராட்டி இருக்கிறார்
பும்ரா வளர்ச்சி
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா குறுகிய காலத்தில் உலக அளவில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக வளர்ந்துள்ளார். அவரைக் கண்டு அனுபவ பேட்ஸ்மேன்கள் கூட அஞ்சும் நிலை உள்ளது
பும்ரா புதிய பந்தில் எதிரணியை திணற வைப்பதில் சக வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமியுடன் நல்ல கூட்டணியை அமைத்து வருகிறார். அவர் கடந்த இரண்டு ஆண்டுகளில் இருந்து அனைத்து கிரிக்கெட் போட்டி வடிவங்களிலும் உச்சகட்டத்தில் இருக்கிறார்.